அடுத்த 5 நாட்களிலும் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (08:37 IST)
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஐந்து நாட்களிலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது
 
திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்பட 8 மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அடுத்த இரண்டு நாட்களில் சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்