வங்கக்கடலில் காற்று சுழற்சி.. தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

வியாழன், 26 அக்டோபர் 2023 (07:58 IST)
வங்கக்கடலில்  ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இரண்டு புயல்கள் கரையை கடந்து விட்டதை அடுத்து தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் விரைவில் வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் வங்க கடலில் காற்று சுழற்சி காரணமாக வடக்கு கேரளா, தெற்கு ஆந்திர, கடலோர பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுவதால் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

காற்று சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் வரும் 31ஆம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு மழையை எதிர்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்