14 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

புதன், 25 அக்டோபர் 2023 (14:23 IST)
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல், அரியலூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில்  இன்று முதல் வரம் 29ஆம் தேதி வரை காண மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் குறிப்பாக மேற்கண்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த மாவட்டங்களின் நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்