இன்னும் சில மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை எச்சரிக்கை

செவ்வாய், 24 அக்டோபர் 2023 (15:08 IST)
இன்னும் சில மணி நேரத்தில் ஆறு மாவட்டங்களில் கன மழை கொட்டப் போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வங்க கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதையும் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்