அதி தீவிர புயலாக மாறிய ஹமூன்.. 6 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..!
புதன், 25 அக்டோபர் 2023 (07:46 IST)
வங்க கடலில் தோன்றியுள்ள ஹமூன் புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வடமேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஹமூன் புயல் தற்போது அதி தீவிர புயலாக மாறி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹமூன் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் அதாவது தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு நல்ல மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.