2 புயல்கள் கரையை கடந்து விட்டதால் வடகிழக்கு பருவமழை வலுவடையும்: வானிலை அறிவிப்பு..!

புதன், 25 அக்டோபர் 2023 (13:42 IST)
அரபிக்கடலில் உருவான புயல் மற்றும் வங்க கடலில் உருவான புயல் ஆகிய இரண்டு புயல்கள் கரையை கடந்து விட்டதால் அடுத்த கட்டமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவம் வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைய தொடங்குகிறது என்றும் அரபிக்கடல் புயலும் வங்கக்கடல் புயல் இருந்ததால் வடகிழக்கு பருவமழை வலுவிழந்து இருந்தது என்றும் ஆனால் தற்போது இரண்டு புயல்கள் கரையை கடந்து விட்டதால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைய தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் வடகிழக்கு பருவ காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்