இன்று இரவு மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், 11 மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வந்தது என்பதை பார்த்தோம்.
மேலும், நேற்று இரவு புயல் கரையை கடந்த போதிலும், தொடர்ந்து சில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.