வங்கக் கடலில் தோன்றிய புயல் புதுவை அருகே கரையை கடந்த நிலையில், புதுவையில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவாக, 410 சென்டிமீட்டர் மழை பெய்து, புதுவையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். வெள்ளம் காரணமாக, வீடுகளை இழந்த மக்கள் தங்குவதற்கான இடமின்றி மிகவும் கடுமையான பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை தங்க வைப்பதற்காக புதுவை மாவட்ட ஆட்சியர், அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளை பாதுகாப்பு முகாம்களாக மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.