விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தாலும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மீட்பு பணிகளை துரிதப்படுத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மூன்று அமைச்சர்களும் விழுப்புரத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், நிவாரண பணிகளை வேகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மாநிலத்தின் பிற பகுதிகளில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், அனைத்து பகுதிகளிலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் சென்னை தயார் நிலையில் உள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.
மேலும், மழை நிவாரண நிதியாக மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெறுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும், முந்தைய நிவாரண நிதி கோரிக்கைக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.