வரலாறு காணாத வெயில்: வீட்டை விட்டு வெளியே வராதீங்க! – அரசு எச்சரிக்கை!

வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (08:24 IST)
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில காலமாக வெயில் வாட்டி வரும் நிலையில் ஈரான் நாட்டில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



கடந்த சில காலமாக மத்திய கிழக்கு நாடுகளான ஈராம், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து வெயில் அதிகமாக வீசி வருகிறது. வரலாறு காணாத வகையில் வெயில் அதிகரித்துள்ளதால் மக்கள் பலரும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

வெயில் அதிகம் வீசி வருவதால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ஈரான் அரசு 2 நாட்கள் பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் பள்ளிகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வெப்பத்தால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் ஈரான் அரசு அறிவித்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்