தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு..!

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (14:48 IST)
தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டிருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் வெப்பம் அதிகரித்தது என்பது தெரிந்தது. 
 
மேலும் வானிலை ஆய்வு மையம்  வழக்கத்தை விட இரண்டு முதல் நான்கு டிகிரி அதிகமாக வெயிலடிக்கும் என்றும் அறிவித்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்யும் என அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் நாளும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
மீண்டும் கோடை காலம் தொடங்கிவிட்டதோ என்ற அதிருப்தியில் இருந்த மக்களுக்கு இந்த அறிவிப்பு நிம்மதியை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்