தலைமையை மாற்றியதா பாஜக…??மக்கள் குழப்பம்

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (15:44 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கடந்தாண்டு வேல்யாத்திரை மேற்கொண்டு தமிழக மக்களிடன் பிரபலமாக அறியப்பட்டார்.

இதனையடுத்து அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக தமிழகம்  முழுவதும் 20 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.

பாஜக தலைவர்  எல்.முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அவருக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், கட்சியின் சின்னம், உள்ளிட்டவற்றில் பிரதமர் மோடியின் பெயரோ அல்லது எல்.முருகன் பெயரோ இடம் பெறவில்லை.. மேலும், எம்.ஜி.ஆரின் சின்னம்,.அம்மாவின் சின்னம் என்று வரையப்பட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றனர் பாஜகவினர். இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்