ஆண்டாளுக்கு மட்டும்தான் எச்.ராஜா குரல் கொடுப்பாரா?: தமிழ்த்தாய் என்ன தக்காளி தொக்கா?

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (12:57 IST)
சமீபத்தில் ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த பிரச்சனை இன்னமும் முடியாமல் தொடர்ந்துகொண்டு தான் உள்ளது. இந்நிலையில் தமிழ்த்தாயை அவமதிக்கும் விதமாக காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி நடந்துகொண்டது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வைரமுத்து ஆண்டாள் குறித்து மேற்கோள் காட்டிய கருத்து இந்து அமைப்புகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அதிலும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வைரமுத்துவை மிகவும் கடுமையாக அநாகரிக வார்த்தைகளால் கண்டித்தார்.
 
எச்.ராஜா வைரமுத்துவுக்கு எதிராக மேடையில் பேசிய பேச்சுக்கள் மிகவும் வைரலாக பரவி இந்து அமைப்புகளை போராட்டத்துக்கு இன்னும் தள்ளியது. வானத்துக்கும் பூமிக்குமாக குதித்த எச்,ராஜா தற்போது விஜயேந்திரர் விவகாரத்தில் வாய்மூடி மௌனியாக இருக்கிறார்.
 
இத்தனைக்கும் விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த அதே மேடையில் எச்.ராஜாவும் இருந்தார். அப்படியானால் எச்.ராஜாவுக்கு ஆண்டாள் மட்டும் தான் முக்கியம். தமிழன்னைக்கு ஒரு அவமரியாதை என்றார் அது எச்.ராஜாவுக்கு கவலையில்லையா? என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை சர்ச்சையில் சிக்கியது காஞ்சி விஜயேந்திரர் என்பதால் இந்த மௌனமா இருக்குமோ எனவும் சந்தேகம் வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்