காரைக்குடி தொகுதி நிலவரம்… ஹெச் ராஜா பின்னடைவு!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (09:52 IST)
காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை 110 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரங்கள் வெளியாகியுள்ளன. தற்போது திமுக அதிக தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் நட்சத்திர தொகுதியாக கருதப்பட்ட காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார். அந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மான்குடி தற்போது வரை முன்னிலை பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்