நவம்பர் 25 முதல் ஆவின் பச்சை பால் பாக்கெட் நிறுத்தம்: டிலைட் ஊதா நிற பால் விற்பனை..!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (08:21 IST)
நவம்பர் 25 முதல் பச்சை நிற பால் விற்பனை நிறுத்தப்படுவதாகவும் அதற்கு பதிலாக டிலைட் ஊதா நிற பால் விற்பனை செய்யப்படும் என்றும் ஆவின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை 25 ஆம் தேதி முதல் நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாக பச்சை நிற பால் இருந்தது என்பதும் இதில் 4.5 சதவீத கொழுப்பு சத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக கொழுப்பு சத்து கொண்ட பால் தயாரிக்க அதிக செலவு ஆகும் காரணத்தினால்  அதிக விலைக்கு உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

எனவே பச்சை பால் பாக்கெட்டுக்கு பதிலாக 3.5 சதவீதம் கொழுப்பு சேர்த்து கொண்ட டிலைட் ஊதா நிற பால் விற்பனை செய்யப்படுவதால், அதிக கொழுப்பு சத்து உள்ள பால் தேவைப்படுவோர் தனியார் நிறுவன பால் நிறுவனத்தின் ஆட வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்