ஆளுநர் ரவி ஆர் எஸ்எஸ்சின் ஊதுகுழல், அவரை மனநல காப்பகத்தில் சேர்ப்பது நல்லது! - SDPI கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக்!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (14:01 IST)
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசியபோது:


 
மதச்சார்பின்மை இன்றைக்கு கேள்விக்குறியாக ஆகி உள்ளது அரசியல் அமைப்பு சட்டம் அடிப்படை கூறுகளில் ஒன்று.நாடு முழுவதும் வெறுப்பு காணப்படுகிறது. வட மாநிலத்தில் அனுதினமும் கலவரங்கள் நடந்து கொண்டு இருக்கிறது,

எஸ்.டி.பி.ஐ சார்பில் டிசம்பர் மாதம் மதுரையில் 'வெல்லட்டும் மதச்சார்பின்மை' மாநாடு நடக்க உள்ளது

என்.ஐ.ஏ தற்போது தமிழகத்தில் உள்ள மதர்சாகளில் விசாரணை செய்து வருகிறார்கள்.அதனை எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டிக்கிறது.. மேலும் அவர்கள் வைத்துள்ள நிதிகளை எடுத்துசென்றுள்ளனர்.

சமூக நிதி அரசாக உள்ள தமிழக அரசு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், டெங்கு காய்ச்சலை குறைக்க தமிழக அரசு விரைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
காவிரி தண்ணீர் பிரச்சினையில் கர்நாடக மாநிலத்தில் அனைத்து கட்சி ஒற்றுமையாக உள்ளது.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பாஜக மதவாதம் வீழ்த்த படவேண்டும்,அதனை நோக்கி எஸ்.டி.பி.ஐ. கூட்டணி இருக்கும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்து. இது சட்ட விரோதம், ஆளுநர் ரவி ஆர் எஸ்எஸ்சின் ஊதுகுழல், ஆளுநர் ரவியை மனநல காப்பகத்தில் சேர்ப்பது நல்லது என்ற கருத்து தற்போது மேலோங்கி வருகிறது, ஊழல் பற்றி பேச பாஜக க்கு அறுகதை இல்லை

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள திட்டம் ஒருவருக்கு கூட நன்மை என்று தெரியவில்லை மேலும் என் மண் என் மக்கள் நடைப்பயணம் செல்வதற்கு இவர்களுக்கு என்ன அருகதை உள்ளது

49 பேரை விடுதலை செய்ய பரிந்துரை செய்யப்பட்ட பின்பும் ஆளுநர் கையெழுத்திடமால் இருக்கிறார்.

20 பேரை பரோலில் விட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம் அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்