எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.. கொலை வழக்கு தொடர்பாக விசாரணையா?
ஞாயிறு, 23 ஜூலை 2023 (08:03 IST)
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்து உள்ள திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
நெல்லை மட்டுமின்றி திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ராமலிங்கம் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும், மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.