தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை இரண்டாவது முறையாக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிவிட்டார் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாள் கொள்கை வடிவில் முடிவெடுக்கப்பட்டது என்பதும் இதற்கான மசோதா சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாவை ஏற்கனவே திருப்பி அனுப்பிய கவர்னர் ரவி ஒரு சில விளக்கம் கேட்டிருந்தார். அந்த விளக்கங்கள் தமிழ்நாடு அரசின் சார்பாக அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் சில விளக்கங்கள் கேட்டு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியுள்ளார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாசுபிரமணியன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவையும் திருப்பி அனுப்பியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.