கொரோனா நிவாரணமாக ஆளுநர் ரூ.1 கோடி நிதியுதவி

Webdunia
சனி, 15 மே 2021 (18:08 IST)
=

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.


தற்போது, தமிழகத்தில் தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருவதால்  ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஒருநாளில் 30 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தொற்றில் இருந்து மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என தமிழக அரசும் காவல்துறையும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு தாரளமான நிதி வழங்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், சமூக அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிடம்  வேண்டுகோள் விடுத்திருந்தார்

இந்நிலையில் நேற்றிரவு கவிஞர் வைரமுத்து ரூ 5 லட்சம் கொரொனா நிவரண நிதி வழங்கினார். இன்று தமிழக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் ரூ.10 லட்சம் வழங்கினார்.

தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். இன்று ஆளுநர் மாளிகை வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுநர் பன்வாரிலால் புரொகித் ரூ.1 கோடியை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்