97 பக்க புகார் பட்டியல்... ஆளுநரிடம் ஒப்படைத்த ஸ்டாலின்!!

செவ்வாய், 22 டிசம்பர் 2020 (11:53 IST)
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்து அதிமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 
 
தமிழக சட்டச்சபை தேர்தலுக்கு இன்னும் 4 - 5 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கிவிட்டது. அரசியல் கட்சி தங்களது பிரச்சாரத்தை தீவரமாக்கியுள்ளனர். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்துள்ளார். இவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு ஆகியோரும் சென்றனர். 
 
இந்த சந்திப்பிற்கு பிறகு முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுகிறது. அமைச்சர்கள் மீது அளித்த ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆளுநரிடம் தமிழக அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார் பட்டியலை மனுவாக அளித்துள்ளோம் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்