மாற்றுத்திறனாளிகள் விருது பெற அரசு அழைப்பு

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2016 (09:34 IST)
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
 

 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் வகையில், மாநில அளவில் சிறப்பாக பணியாற்றும் சேவை நிறுவனங்களை தேர்வு செய்து, இந்த வருடம் ஆகஸ்டு 15 ம்  தேதி சுதந்திர தினவிழா அன்று விருதுகள் வழங்கி அவர்களை முதல்வர் ஊக்குவித்து கவுரப்படுத்த உள்ளார்.
 
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த தொண்டு நிறுவன விருது, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த மருத்துவர் விருது, மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்துக்கான விருது, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறப்பு சமூகப்பணியாளருக்கான விருது வழங்கப்பட உள்ளது.
 
இந்த விருதுகளைப் பெற, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பங்களை பெற்று, உரிய சான்றுகளுடன், மாநில ஆணையர், நேரு உள்வட்ட சாலை, கே.கே.நகர், சென்னை – 78 என்ற முகவரிக்கு அளிக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்