தங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம்: நகைக்கடைக்காரரின் விழிப்புணர்வு முயற்சி
தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பொதுமக்களுக்கு வாக்குபதிவு குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நகைக்கடைக்காரர் ஒருவர் தங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை செய்து வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
புதுக்கோட்டையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் 2.500 மில்லி கிராம் எடையுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தங்கத்திலேயே வடிவமைத்துள்ளார். இந்த தங்க வாக்குப்பதிவு இயந்திரத்தை அவர் தனது கடையில் பார்வைக்கு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் 60 முதல் 70 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நூறு சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்கத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்து உள்ளதாகவும் இதனை பார்ப்பவர்கள் வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் வகையில் இருக்கும் என்றும் அவர் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது