தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்திற்கு நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அசாமில் 30 தொகுதிகளிலும் மேற்குவங்கத்தில் 39 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது என்பதும் பெரும்பாலான இடங்களில் தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராமில் பொதுமக்களை ஓட்டு போட விடாமல் துணை ராணுவ படையினர் தடுப்பதாக மம்தா குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டறியப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதனை அடுத்து தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் சரமாரியாக குற்றச்சாட்டு கூறி உள்ளது அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அல்லது பதிவு செய்யப்படாத இயந்திரமா என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் வாக்கு பதிவு செய்யப்பட்ட இயந்திரமாக இருந்தால் தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது. பாஜக வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் இருந்த சம்பவம் அசாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது