ஓலா காரை முன்பதிவு செய்து கஞ்சா கடத்திய இளைஞர்கள்: 2 பேர் அதிரடி கைது..!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (11:31 IST)
ஓலா காரை முன்பதிவு செய்து 18 கிலோ கஞ்சா கடத்தியதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக சென்ற ஓலா காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு இந்த கஞ்சா பொட்டலங்கள் கடத்தி செல்லப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காரில் இருந்தா மூன்று பேரை காவல்துறையினர் விசாரணை செய்தனர்
 
அதில் இரண்டு பேர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் சென்னையில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து திருச்சி கும்பகோணம் பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது
 
இதனை அடுத்து காவல்துறையினர் இரண்டு பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்