டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான நிலையில் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை செய்தனர். இதனை அடுத்து விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கையில் ஊழல் செய்ததாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர் மீது விசாரணை நடத்த டெல்லி மாநில துணைநிலை கவர்னர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் நடந்த சில மாதங்களாக விசாரணை செய்து வரும் நிலையில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சம்மன் அனுப்பப்பட்டது.