'' மனிதர்களால் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரம்''- டாக்டர் ராமதாஸ் டுவீட்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (20:41 IST)
வடகொரியாவில் தடை செய்யப்பட்ட சினிமாவை பார்த்த 2 பள்ளி மாணவர்கள் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய  நிலையில், மற்றொரு மாணவருக்கு நேற்று 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆசிய நாடான வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது.

ALSO READ: வடகொரியா: அமெரிக்க சினிமாவைப் பார்த்த இரு மாணவருக்கு தூக்கு!
 
எதிரி நாடுகளின்( அமெரிக்கா, தென் கொரியா) தயாரிப்பான  சினிமா, வெப் தொடர்களைப் பார்த்தால் கடும் தண்டனை விதிக்ககப்படும் என எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில்,  அங்குள்ள ரியாங்காங் என்ற மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் உயர் நிலை படிக்கும் இரு மாணவர்கள் அமெரிக்க நாட்டு சினிமாவை பென் டிரைவ் மூலலம் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இவர்கள்  அக்டோபர் மாதம் ஓரு நகரில் விமான ஓடுபாதையில் மக்கள் நேரில் காணும் வகையில், தூக்கில் போடப்பட்டனர். அதேபோல்,  வடகொரியாவில் தடை செய்யப்பட்ட தென் கொரிய படமான தி அங்கில் என்ற திரைப்படத்தை 5 நிமிடங்கள் பார்த்ததற்காக 14 வயது மாணவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது உலக நாடுகளையே அதிச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், வடகொரொயாவின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில்,  ‘’வடகொரியாவில் தடை செய்யப்பட்ட  தென்கொரிய  தொடர்களை பார்த்ததற்காக இரு சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு  பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.  இது மனிதர்களால் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரம்; இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

விலங்குகளுக்குக் கூட இவ்வளவு வெறியும், குரூரமும் இருக்காது. அண்டை நாட்டு தொலைக்காட்சித் தொடரை இரு சிறுவர்களை கொடூரமாக  சுட்டுக் கொல்வதை நாகரிக சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. #NorthKorea  அரசு  வெறுப்பையும், பகைமையையும்  கைவிட்டு மனிதநேயத்தை மதிக்க வேண்டும்! என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்