உலக பசி குறியீட்டில் இந்தியா 107-ஆவது இடம் கவலையளிக்கிறது - ராமதாஸ் டுவீட்

சனி, 15 அக்டோபர் 2022 (14:40 IST)
2022ஆம் ஆண்டுக்கான உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து,  பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளதாவது:

‘’2022ஆம் ஆண்டுக்கான உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ALSO READ: சோமாலியா வறட்சி - 'இறந்த குழந்தையை புதைக்க முடியாத அளவுக்கு பசிக்கொடுமை'
 
உலகின் ஐந்தாவது பொருளாதார வல்லரசாக உயர்ந்துள்ள இந்தியா, ஏழை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சூடான் ஆகியவற்றை விட பின்தங்கியிருப்பது கவலையளிக்கிறது!

உலக பசி குறியீடு என்பது பசி, பட்டினியை விட நுண்ணூட்டச் சத்து குறைபாடு, குழந்தைகளின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமை, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கொண்டே கணக்கிடப்படுகிறது.

அதனால் இந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்! நுண்ணூட்டச் சத்துக்குறைவு, வளர்ச்சி இல்லாமை ஆகியவற்றுக்கு வறுமை தான் முக்கியக் காரணம். இவை தவிர மற்ற காரணங்கள் என்னென்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றை சரி செய்வதற்கான கொள்கைகளை வகுத்து மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
 
Edited by Sinoj

உலக பசி குறியீடு என்பது பசி, பட்டினியை விட நுண்ணூட்டச் சத்து குறைபாடு, குழந்தைகளின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமை, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. அதனால் இந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்!(3/4)

— Dr S RAMADOSS (@drramadoss) October 15, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்