கமல்ஹாசன் முதலில் கவுன்சிலர் ஆகட்டும்! அப்புறம் முதல்வர் பத்தி பேசலாம். ராஜேந்திரன் பாலாஜி

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (07:01 IST)
நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும், மக்களுக்காக முதல்வர் ஆகப்போவதாகவும் பேட்டி ஒன்றில் கூறிய நிலையில் முதலில் அவரை கவுன்சிலர் ஆக சொல்லுங்கள், அப்புறம் முதல்வர் ஆவது குறித்து யோசிக்கலாம் என்று தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்



 
 
சினிமாவில் வேண்டுமானால் கமல்ஹாசன் முதல்வர் ஆகலாம், ஆனால் உண்மையில் அவர் கவுன்சிலர் கூட முடியாது. சமீபகாலமாக நடிகர்கள் கட்சி ஆரம்பித்து என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த கட்சிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. எனவே கமல்ஹாசன் மூலம் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படபோவதில்லை' என்று கூறினார்.
 
இதற்கு கமல்ஹாசனின் ரசிகர்கள் டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர். மற்ற நடிகர்களை போல கமல்ஹாசன் இல்லை என்றும், அவர் கண்டிப்பாக முதல்வர் ஆவார் என்றும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்