விவசாய குடும்பத்தில் இருந்து உழைத்து முன்னேறியுள்ளேன்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (06:01 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கடலூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது முதல்முறையாக சற்று கோபத்துடன் தினகரனை மறைமுகமாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது: 



 
 
"பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா வழியிலும் வந்த தொண்டர்கள் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அசைக்கவோ, அழிக்கவோ முடியாது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா என்ற இரு பள்ளியில் படித்த மாணவர்கள் நாங்கள். அதனால் யாருடைய மிரட்டல்களுக்கும் அஞ்சமாட்டோம். எத்தகைய இடையூறுகள் வந்தாலும் எதிர்கொள்வோம். சிலர் வானத்தில் இருந்து குதித்து வந்ததுபோல் பேசுகிறார்கள். நாங்கள் அப்படியில்லை. சாதாரண கிளை கழகத்திலிருந்துதான் இந்த நிலைக்கு வந்துள்ளோம்.
 
நாங்கள் கொல்லைப்புறம் வழியாக வரவில்லை. ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து உழைத்துதான் வந்துள்ளோம். ஆனால், சிலர் கொல்லைப் புறம் வழியாக வந்து கட்சியையும், ஆட்சியையும் பிடித்துவிடவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது" 
 
முதல்வர் இந்த அளவுக்கு டென்ஷனாகவும், கோபமாகவும் பேசி அதிமுகவினர் பார்த்ததில்லை என்பதால் அவரது பேச்சை ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்..
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்