கமல், ரஜினியால் கவுன்சிலர் கூட ஆக முடியாது. தனியரசு எம்.எல்.ஏ

வெள்ளி, 28 ஜூலை 2017 (23:29 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் நிச்சயம் வெகுவிரைவில் இணைந்து அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து கட்சி ஆரம்பித்து, அந்த கட்சிக்கு அஜித், விஜய் ஆதரவு கொடுத்தால் நிச்சயம் ஆட்சியை பிடித்துவிடும் என்று சமீபத்தில் எஸ்.வி.சேகர் கூறியிருந்தார். அரசியல் விமர்சகர்களின் கருத்தும் இதுவாகத்தான் உள்ளது.



 
 
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இன்று மாலை பேசிய தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவரான தனியரசு எம்.எல்.ஏ., ‘’தமிழகத்தில் முன்பு இருந்த நிலைமை இப்போது இல்லை. சினிமா நடிகர்களை நம்பி அறியாமையில் மக்கள் வாக்களித்த காலம் முடிவடைந்து விட்டது. முன்னர், ஒப்பனையை உண்மை என்று நம்பி மக்கள் வாக்களித்தார்கள். இப்போது அந்த நிலைமை இல்லை. அறிவு சார்ந்த அரசியலுக்கு மக்கள் வந்து விட்டார்கள். கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வந்தால் அவர்களால் கவுன்சிலராகக் கூட ஜெயிக்க முடியாது என்பதுதான் தற்போதைய தமிழகத்தின் நிலைமை' என்று கூறினார்.
 
கமல், ரஜினியை சீண்டாமல் அப்படியே விட்டால் கூட ஒதுங்கி கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால் மாறி மாறி இருவரையும் சீண்டுவது அரசியல்வாதிகள் சொந்தக்காசில் சூனியம் வைத்து கொள்வது போல என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்