கர்நாடகம் முதல்வருக்கு இறுதிச் சடங்கு நடத்தி விவசாயிகள் போராட்டம்!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (16:21 IST)
காவிரி நீர் பங்கீட்டில் தமிழகம்-கர்நாடகா இடையே மோதல் அதிகரித்து வரும்  நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா அதிகாரிகள் பங்கேற்கும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று கூடியது.

இன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கியது.  இந்த கூட்டத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா தலைமை வகிக்கிறார்

தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறப்பை மறுபரிசீலனை செய்ய கர்நாடகாவுக்கு  கோரிக்கை வைக்கும் நிலையில், மேட்டூர் அணை நீர் வீணடிக்கப்படுவதாகவும், அதை ஆய்வு செய்யவும் கர்நாடகா வலியுறுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

தமிழகத்துக்கு நீர் திறப்பதை எதிர்த்து பெங்களூரில் இன்று பந்த் நடக்கும் நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறந்து விட முடியாது என கர் நாடகம் மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 53 சதவீதம் மழை பற்றாக்குறை நீடிக்கிறது…காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு வாதம் செய்துள்ள நிலையில், 11 தாலுக்காக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இனி நீரை திறக்க முடியாது என தெரிவித்துள்ளது

இந்த நிலையில், தமிழக விவசாயிகள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, இறுதிச் சடங்கு நடத்தி நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல், தமிழகத்திற்கு எதிராக  கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்