சென்னையில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் இனி இல்லை! - சென்னை மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு!

Prasanth K

திங்கள், 21 ஜூலை 2025 (09:23 IST)

சென்னையில் மாநகராட்சி ஒப்பந்தத்திற்கு வழங்கியுள்ள வாகன பார்க்கிங் பகுதிகளில் இனி கட்டணமின்றி வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தகம் கட்டண வசூல் பணிக்காக ஒப்பந்தம் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்திற்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் நேற்றுடன் (ஜூலை 20) முடிவுக்கு வந்துள்ளது.

 

அதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்தகங்களுக்கான ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. மறு ஒப்பந்தம் செய்யப்படும் வரை வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் எண்ட கட்டணமும் இன்று நிறுத்திக் கொள்ளலாம்.

 

இதில் ஏதேனும் புகார்கள் இருக்கும்பட்சத்தில் அதை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தொடர்புக் கொண்டு தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் சென்னை வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்