12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம்.. கடைசி தேதி அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 18 நவம்பர் 2024 (16:39 IST)
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு கட்டணத்தை செலுத்தும் தேதி குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை தேர்வு கட்டணம் செலுத்தலாம் என்றும் இந்த தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட தேதிக்குள் அனைத்து மாணவர்களும் தேர்வு கட்டணம் செலுத்துவதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணம் விலக்கு பெறும் மாணவர்களின் விவரம் பின்வருமாறு:

1. தமிழை பயிற்று மொழியாகக்‌ கொண்டு தேர்வெழுதும்‌ அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்‌ தேர்வுக்‌ கட்டணம்‌ செலுத்துவதில் இருந்து விலக்கு

2. பி.சி/ பி.சி.எம். பிரிவு - பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல்‌ இருப்பவர்களுக்கு மட்டும்‌

3. அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ பயிலும்‌ பார்வை குறைபாடுடைய மற்றும்‌ செவித்திறன்‌ மற்றும் பேச்சுத்‌ திறன்‌ குறைபாடுடைய மாணவர்கள்‌.

4. MBC/ DC பிரிவினருக்கான வருமானத்திற்கு உச்ச வரம்பு எதும்‌ இல்லை.

5. SC/ SCA/ ST மற்றும்‌ எஸ்சி Converts (SS) - பெற்றோருக்கான வருமானத்திற்கு உச்ச வரம்பு எதும்‌ இல்லை

தேர்வு கட்டணம் செலுத்தவேண்டிய மாணவர்கள்: சுயநிதி/ மெட்ரிகுலேஷன்‌ மற்றும்‌ ஆங்கிலோ-இந்தியப்‌ பள்ளிகள்‌ சுயநிதி, மெட்ரிகுலேஷன்‌ மற்றும்‌ ஆங்கிலோ இந்தியப்‌ பள்ளிகளில் பயின்று 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வெழுதும்‌ மாணவர்கள்‌ தேர்வுக்‌ கட்டண விலக்கு இல்லை



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்