அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர் வராததால், மாணவர்களை பேசாமல் இருக்கும்படி தலைமை ஆசிரியர் கூறியதாகவும், அவ்வாறு மீறி பேசிய மாணவர்களின் வாயில் டேப் ஒட்டப்பட்டதாகவும், அந்த மாணவர்கள் சாப்பிடவோ, தண்ணீர் கொடுக்கவோ அனுமதிக்கப்படவில்லை என்றும் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து தலைமை ஆசிரியை விளக்கமளித்த போது, வகுப்பு ஆசிரியை வராததால் மாணவர்களே வகுப்பை கவனித்துக் கொண்டனர். அப்போது யாரிடமும் பேசக்கூடாது என்பதற்காக விளையாட்டாக ஒருவருக்கு ஒருவர் டேப் ஒட்டி கொண்டனர். நான் அந்த வகுப்புக்கு சென்ற போது, ஒரு மாணவன் வாயில் மட்டும் டேப் இருந்தது. அதை அகற்ற சொல்லிவிட்டேன். மற்றபடி இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.