நாமதான் எதிர்கட்சின்னு நிருபிக்கணும்..? – கூடுகிறது அதிமுக பொதுக்குழு!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (12:39 IST)
தமிழ்நாடு சட்டசபையின் எதிர்கட்சியாக விளங்கும் அதிமுக தனது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தும் தேதியை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் அதிமுக எதிர்கட்சியாக அங்கம் வகித்து வருகிறது. ஆனால் அரசின் கொள்கைகள், செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்தும், எதிர்த்தும் பாஜக தீவிரமாக ஸ்கோர் செய்து வருகிறது.

சமீபத்தில் பாஜக நடத்திய போராட்ட கூட்டங்களுக்கும் அதிக அளவில் மக்கள் வந்தது அதிமுகவினருக்கே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. பாஜகவின் செயல்பாடுகள் குறித்து அதிமுகவின் பொன்னையன் எச்சரித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக தனக்கான இடத்தை தக்கவைக்கும் ஆயத்தங்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. தற்போது அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. ஈபிஎஸ் – ஓபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் ஜூன் 23ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை வானகரத்தில் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பரபரப்பு தொடர்ந்து நிலவி வரும் சூழலில் இந்த பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்