ஜல்லிக்கட்டு தொடர்பாக இயற்றப்பட்ட அவசர சட்ட முன்வடிவு, குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பத் தேவையில்லை எனவும், அதன் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகமே அனுப்பலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுத்தால் அதை மத்திய அரசு ஆதரிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். அதைத்தொடர்ந்து டெல்லியில் இருந்த தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் சட்டவல்லுனர்களோடு ஆலோசித்து அவசர சட்டம் ஒன்றை உருவாக்கி அதை உள்துறை அமைச்சகம் சார்பில் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர சட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவசர சட்ட முன்வடிவு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பத் தேவையில்லை எனவும், அதன் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகமே அனுமதி வழங்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது. நேற்று மாலை உருவாக்கப்பட்ட அவசர சட்டம் இன்று காலை நேரடியாக தமிழகம் வந்துள்ளது.
சென்னை வரும் அவசர சட்டத்தின் முன்வடிவு, தலைமைச் செயலக அதிகாரிகளால் ஆளுநருக்கு அனுப்பப்படும். அவர் அதை சரிபார்த்த பின் கையொப்பம் இட்டு அவசர சட்டத்தை இன்று மாலையே இயற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.