அதிமுகவினர் மீது ரெய்டு; ஆளுனரை சந்திக்கும் எடப்பாடியார்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (13:26 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடந்த நிலையில் நாளை ஆளுனர் ஆர்.என்.ரவியை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளனர். அவரிடம் அதிமுகவினர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து புகார் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்