மாணவிகள் படிப்பதற்கு விரைவில் அனுமதி அளிப்போம்! – தாலிபான்கள் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (13:01 IST)
ஆப்கானிஸ்தானில் மாணவிகள் படிப்பதற்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பு ஆட்சியை கைப்பற்றிய நிலையில் இதுவரையில் இருந்த ஆப்கானிஸ்தான் சட்டதிட்டங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் பெண்களுக்கு அரசியல் மற்றும் கல்வியில் உரிமை கிடையாது என தெரிவித்தது. தாலிபான் ஆட்சியில் இல்லாதபோது படித்த பட்டப்படிப்புகள் செல்லாது என அறிவித்தது என பல நடவடிக்கைகள் மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகி வந்தன.

இந்நிலையில் பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் படிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை மீது பலரும் தொடர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தாலிபான்கள், விரைவில் பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் பயில அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு முன்னர் பள்ளி, கல்லூரி செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்