ஊரடங்கு + அதிக தளர்வுகளை வழங்கலாமா? ஈபிஎஸ் ஆலோசனை!!

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (11:01 IST)
தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தளர்வுகள் அளிக்கலாம் என்பது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் ஆலோசனை.
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் 2 லட்சத்தை தாண்டியுள்ளது. நாளுக்குநாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஜூலை 31 வரை அறிவித்த பொதுமுடக்கம் முடிவடைய உள்ளது. எனினும் புதிய பாதிப்புகள் ஏற்படாத நிலை தமிழத்தில் உருவாகவில்லை. 
 
இந்நிலையில் இந்த மாத இறுதியோடு பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில் மேலும் நீட்டிக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். 
 
இந்நிலையில் இன்று மருத்துவ குழுவுடன் அலோசனை நடத்தி வரும் அவர், தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தளர்வுகள் அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்துவதாக தெரிகிறது. கடந்த முறையே மருத்துவ குழுவினர் ஊரடங்கை பரிந்துரைக்காத நிலையில் இந்த முறை என்ன பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளன என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்