கரூரில் 2 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை ராணுவ படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரிகளில் சோதனை மேற்கொண்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெயில் சுட்டெரிப்பதால் ஆற்றுப்படுகையில் குடை பிடித்தபடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், கரூர் மாவட்டம், மல்லம்பாளையம், நன்னியூர் பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளில் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
6 கார்கள் மற்றும் 1 டெம்போ டிராவவர் வாகனத்தில் வந்த 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் சோதனையின் முடிவில் அவர்கள் என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் மணல் குவாரியில் நடந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.15 கோடி பணத்தை பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஒரு கிலோ தங்கம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 4 நாட்களாக சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.