தார் சாலை இறுகும்வரை காத்திருக்க கூடாதா? கரூர் கலெக்டர் விளக்கம்..!

திங்கள், 9 அக்டோபர் 2023 (10:33 IST)
சமீபத்தில் கரூரில் தார் சாலை போடப்பட்ட நிலையில் அந்த சாலை தரமற்றதாக இருக்கிறது என்று கூறிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் ஒரு சிலர் தார் சாலையை கையால் பெயர்த்து எடுக்கும் காட்சி இருந்ததை அடுத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். கரூர் மாவட்டம் தரங்கம்பட்டியில் தரமற்ற தார் சாலைகள் போடப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியானது தவறான செய்தி.

தார் சாலை பணி மேற்கொள்ளப்பட்ட சில மணி நேரங்களுக்குள் சேதப்படுத்தி தரமற்ற சாலை அமைத்தது போல் செய்தி பரப்பப்பட்டுள்ளது. பொதுவாக தார் சாலை அமைக்கப்பட்டு இருகுவதற்கு 48 முதல் 72 மணி நேரங்கள் ஆகும். இது அறிவியல் ரீதியான உண்மை.

ஆனால் அதுவரை பொறுக்காமல் அதற்கு முன்பே சாலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்