முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை துரைமுருகன் சந்திக்கின்றாரா?

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (20:26 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானதால் தொண்டர்கள் மருத்துவமனை முன் ஏராளமாக குவிய தொடங்கினர். மருத்துவமனை முன்பு தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறியபடி உள்ள காட்சி கல்நெஞ்சையும் கரைக்கும் வகையில் உள்ளது.
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கருணாநிதியின் உடல்நலம் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
 
இந்த நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் கருணாநிதி உடல்நிலை குறித்து இன்னொரு அறிக்கையை காவேரி மருத்துவமனையின் நிர்வாகம் வெளியிடவுள்ளதாகவும், இந்த அறிக்கையின் நிலையை பொறுத்தே கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்