இந்த நிலையில் காவேரி மருத்துவமனைக்கு சற்றுமுன் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, டி.ஆர்.பாலு ஆகியோர் வருகை தந்துள்ளனர். இன்னும் பல விஐபிக்கள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் ஆழ்வார்ப்பேட்டை பகுதி முழுவதிலும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.