துரைமுருகன் உடல் சீராக உள்ளது - மருத்துமனை தரப்பு அறிக்கை!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (13:36 IST)
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவந்தார். மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
மேலும் துரைமுருகன் மகனும் வேலூர் தொகுதி எம்பியுமான கதிர் ஆனந்த் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரே நேரத்தில் துரைமுருகன் மற்றும் அவருடைய மகன் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் சற்றுமுன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்  உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் ரேலா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்