தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ள நிலையில் மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தற்போது தொடங்கியுள்ள நிலையில் பாதிப்புகள் முன்னை விட மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த முறை இளைஞர்கள், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மதுரை திருப்பாலை பகுதியிலுள்ள காயத்ரி நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தஞ்சாவூர் உள்ளிட்ட பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுட்தி வருகிறது.