திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், சோழவரம், சுற்றுவட்டார இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரவு தொடங்கி 3வது நாளாக மழை நீடித்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் சோழவரம் 30செமீ, செங்குன்றம் 28செமீ மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நேற்று 277 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 3471 கன அடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2326 மில்லியன் கனஅடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 16.57 அடி உயரத்திற்கு நீர்இருப்பு உள்ளது.
புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 184 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தொடர் மழை காரணமாக ஏரிகளில் நீர் இருப்பு உயர தொடங்கியுள்ளது.