கல்லூரி மாணவிகளை பேருந்தை தள்ள பயன்படுத்திய விவகாரம்: ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்..!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (10:20 IST)
பழுதாகி நின்ற பேருந்தை தள்ளுவதற்கு அந்த பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவிகளை பயன்படுத்திய விவகாரம் குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உள்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
நாகர்கோவிலில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் அதில் ஏராளமான கல்லூரி மாணவிகளும் பயணம் செய்தனர். இந்த நிலையில் திடீரென அந்த பேருந்து பழுதாகி நின்று விட்டது. 
 
இதனை அடுத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கல்லூரி மாணவிகளை இறங்கி தள்ள பயன்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து போக்குவரத்து துறையின் பொது மேலாளர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். 
 
பழுதாகி நின்ற பேருந்தை தள்ளிய வீடியோ வைரலான நிலையில் ஓட்டுநர் நடத்துனர் உள்பட நான்கு பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்