ஓட்டுநர் நடத்துனர் பணிகளில் சேர இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. எழுத்து தேர்வு பொருத்தவரை பொது அறிவு, போக்குவரத்து விதிகள், மெக்கானிக் பிரிவு பிரிவில் அறிவு, வாகனம் ஓட்டும் திறன், ஆகியவை குறித்து வினாத்தாள் கேட்கப்பட வேண்டும் என்றும் அனைத்து போட்டிகளிலும் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பொதுதமிழ் தேர்வுக்கு 50 மதிப்பெண், பொது அறிவுக்கு 20 மதிப்பெண், போக்குவரத்து விதி மற்றும் மெக்கானிக் பிரிவுக்கு 30 மதிப்பெண், ஓட்டுநர் திறன் தேர்வுக்கு 80 மதிப்பெண், நேர்காணலுக்கு 20 பாதிப்பெண் என்று அளவீடு இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது