அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பணிகளுக்கு விண்ணப்பம்.. இணையதளம், கடைசி தேதி அறிவிப்பு..!

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (09:57 IST)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கு ஆள் எடுக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது இது குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது.  
 
அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. http://arasubus.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 19 முதல் அதாவது நாளை முதல் செப்டம்பர் 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ள இடையில் தகுதியான ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு விண்ணப்பங்களை விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 
 
அரசு போக்குவரத்து கழகத்தில் ஏராளமான காலியிடங்கள் உள்ளதை அடுத்து அந்த காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்