கத்தாருக்கு இரண்டு மடங்கு நாமக்கல் முட்டைகள் ஏற்றுமதி!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (20:53 IST)
கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக நாமக்கல்லில் இருந்து கூடுதலாக முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தியாகும் முட்டைகளில் நாமக்கல் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியளவில் மட்டுமின்றி உலகளவில்  பல நாடுகளுக்கும் இங்கிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நாமக்கல்  மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட கோழிபண்ணைகள் உள்ளன.

தற்போது, கத்தாரில் ஃபிஃபாவின் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடந்து வருவதால், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கத்தாருக்கு 1 ½ கோடி முட்டைகள் கடந்த மாதம்  21 ஆம் தேதி ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்த நிலையில்,  ஒவ்வொரு மாதமும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்வது அதிகரித்த நிலையில், தற்போது, 2.20 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்லில்   நாள்தோறும் 4 கோடிக்கு மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்